அன்னையே அனைத்துமாய் என்ற தலைப்பில் இணைந்தமைக்கு மிகவும் நன்றிகள் பல. வாழ்க்கையில் சிறுவயது முதல் ஏதாவது ஒரு துறையில் வெற்றி காண்பது என்பது எனது லட்சியம். இதில் (journalist) ஆவது என்பது எனக்கு மிகவும் பிடித்த ஒன்று. ஆகையால் நான் பத்திரிகை துறையில் 21 வருடங்கள் பத்திரிகை துறையில் பேட்டி எடுப்பதும், புகைப்படம் எடுப்பதும், விளம்பரம் சேகரிப்பதும், இதழ் வடிவமைப்பதும் என்று சொல்லிக்கொண்டே போகலாம். ஒரே நாளில் எத்தனை பக்கங்கள் வேண்டுமானாலும் அதிவிரைவில் முடித்துவிடுவேன். என்னையே நான் பெருமையாக சில நேரங்களில் பெருமைபட்டுக்கொண்டதுண்டு. வீட்டை அழகாக வைத்துக்கொள்வது முதல் சமையல்கலை வரை அத்துப்படி. எனக்கு எதையுமே நேர்த்தியாக செய்வது என்பது எனது லட்சியம். தனித்தனியாக செறுப்பை விடக்கூடாது, அதற்கும் மரியாதை கொடுப்பது என்பது எனது விருப்பம். அதனால்தான் இன்று வரை எனது மாமியார் மெச்சிய மருகளாய் உள்ளேன். நல்ல அம்மாவாகவும், எனது அம்மாவுக்கு நல்ல மகளாகவும், எனது அண்ணன்களுக்கு நல்ல தங்கையாகவும், எனது அண்ணிகளுக்கு நல்ல நாத்தநார்கவும். அனைத்துமாய் அன்னையாய் என்னை பார்க்கிறேன்.நன்றி.கௌரிபிரகாஷ் , சைதாப்பேட்டை,