அன்பென்றாலே அம்மா

அன்பென்றாலே அம்மா

Saturday, 31 August 2013

அம்மா என்ற பாசையின்
அழியாத செல்வம்
அதரத்தில் உச்சரிக்கும்
அமிர்த வார்த்தை

அன்பு என்ற ஆலயத்தின்
அர்ச்சனை மந்திரம்
அறிவை ஊட்டும்
அகராதி ஊற்று

அன்னை மடியில்
அலைவீசும் நேசம்
அகத்தின் மென்மையில்
அரவணை அச்சகம்

அல்லல் தீண்டினும்
அனுசரிக்கும் ஆத்மா
அகிலம் போற்றும்
அதிசய அவதாரம்.

மனிதநேயமும் இரக்க குணமும்......

மனிதநேயமும் இரக்க குணமும் இடம் மாறிவிட்டதே!

ஒரு பல்லியால் முடியும்போது நம்மால் முடியாதா...

ஜப்பான் நாட்டை சேர்ந்த ஒருவர் தன்னுடைய வீட்டை புதிப்பிப்பதற்காக மரத்தாலான சுவற்றை பெயர்த்து எடுத்து கொண்டு இருந்தார். ஜப்பான் நாட்டில் பெரும்பாலும் வீடுகள் மரத்தாலயே கட்டப்பட்டிருக்கும் இரண்டு கட்டைகளுக்கு இடையில் இடைவெளி விட்டு கட்டப்பட்டிருக்கும்.

வீட்டு சுவற்றை பெயர்த்து எடுக்கும்போது இரண்டு கட்டைகளுக்கு இடையில் ஒரு பல்லி சிக்கி இருப்பதை பார்த்தார். அது எப்படி சிக்கி இருக்கிறது என்று அந்த பல்லியை சுற்றி பார்த்தார், அவர்அப்போதுதான் கவணித்தார். வெளி பகுதியில் இருந்து ஆணி அடிக்கும்போது அந்த ஆணி பல்லியின் காலில் இறங்கி இருக்கிறது.

அவருக்கு ஆச்சரியமாக இருந்தது அந்த ஆணி அடித்து குறைந்தது 3 வருடம் ஆகி இருக்கும். எப்படி இந்த பல்லி 3 ஆண்டுகள் உயிருடன் இருந்தது இதை நாம் கண்டு பிடித்து ஆக வேண்டும் என்று மேற்கொண்டு வேலை செய்யாமல் அந்த பல்லியை கண்காணித்து கொண்டு இருந்தார் சிறிது நேரம் கழித்து இன்னொரு பல்லி அதன் அருகில் வருவதை கண்டார். அந்த பல்லி தன் வாயில் இருந்து உணவை எடுத்து சுவற்றில் சிக்கிக் கொண்டு இருந்த பல்லிக்கு ஊட்டுவதை பார்த்தார். அவருக்கு தூக்கி வாரிப்போடது 3 ஆண்டுகளாக இந்த பல்லி சுவற்றில் சிக்கி இருந்த தன் சக பல்லிக்கு உணவு அளித்து வந்து உள்ளது.

ஒரு பல்லி தன் சக பல்லிக்கு எந்தவித எதிர்பார்ப்பும்இல்லாமல் 3 ஆண்டுகள் உணவளித்து வந்துள்ளது.

ஒரு பல்லியால் முடியும்போது உங்களால் முடியாதா...

உன்னை 10 மாதம் சுமந்த உன் தாய்க்கு அவர்கள் முடியாத காலக்கட்டத்தில் உணவளிக்க முடியாதா, உன் தாரம் ஊணமாயின் அவளுக்கு உன்னால் உணவளிக்க முடியாதா...

இப்படித்தான்......

 ஆயிரம் பெற்றோர்கள் இருந்தும்
முத்தமிட ஒரு குழந்தைகூட இல்லை
முதியோர் இல்லத்தில்..

* பணக்காரன் ஆகிவிட்டான் பாகன்
இன்னும் பிச்சையெடுக்கிறது
யானை..

* ஆணி குத்திய கால்களுடன்
செருப்பு தைக்கும் சிறுவன்..

* அழைத்த குரலுக்கு ஓடி வர
ஆள் இல்லாத நெடுஞ்சாலை விபத்தில்,
உயிருக்கு போராடி இறந்து கிடந்தார்
ஆம்புலன்ஸ் டிரைவர்.

* எரிவாயு விலை ஏற்றத்தை கண்டித்து
எதிர் கட்சியினர் எரித்துவிட்டனர்
ஏழை குடிசைகளை.

* குங்குமம் வார இதழை
விரும்பி படிக்கும் வாசகி
விதவையானாள்.

*பட்டினி சாவை எதிர்த்து
ஊர் மக்கள்
இன்று உண்ணாவிரதம்.

* அதிக வலி எடுக்கிற போது
அம்மா என்று கத்திவிடுகிறது
அனாதை குழந்தை

Saturday, 24 August 2013

Tamil News Papers

  1. தினமலர்
  2. தினத்தந்தி
  3. தினகரன்
  4. தினமணி
  5. தமிழ்பேப்பர்.காம்
  6. தின பூமி
  7. மாலைமலர்
  8. நக்கீரன்
  9. தட்ஸ்தமிழ்
  10. பிபிசி தமிழ்
  11. தமிழ் முரசு
  12. விகடன்
  13. விடுதலை
  14. வெப் துனியா
  15. மக்கள் முரசு
  16. ஒற்றன்
  17. 4தமிழ்மீடியா
  18. இந்நேரம்.காம்
  19. பாரீஸ் தமிழ்
  20. நெருடல்
  21. அலைகள்
  22. தமிழ் குறிஞ்சி
  23. சங்கமம் லைவ்
  24. தலைப்பு நியூஸ்
  25. தமிழ்செய்தி நியூஸ
  26. திண்ணை.காம்
  27. சத்தியம்
  28. புதிய தலைமுறை
  29. GTVSPV செய்திகள்
  30. பெரியார் தளம்
  31. தின இதழ்
  32. டெய்லிமிரர்
  33. A2Z தமிழ்நாடு
  34. தமிழ்விண்
  35. தமிழர்
  36. ஈழதேசம்
  37. புதிய உலகம்
  38. தமிழ் ஸ்பை
  39. புதினம் நியூஸ்
  40. வனம்க்கம் மலேசியா
  41. அடியக்கமங்களம்
  42. ஆம்பல்
  43. லங்கா முரசு
  44. Vok நியூஸ்
  45. தடாகம்
  46. EuTamilar
  47. நாம் தமிழர்
  48. உயர்வு
  49. புதினம் நியூஸ்
  50. தினகதிர்
  51. நிலவரம்
  52. Betamil.com
  53. தமிழ்முரசு.காம்
  54. விடிகுரல்
  55. கணணி உலகம்
  56. ஒரு பேப்பர்
  57. பதிவு
  58. தமிழ் ஓவியம்
  59. எதிரி
  60. சரிதம்
  61. மனிதன்
  62. கதிரவன்
  63. ரதம்
  64. வியப்பு
  65. துருவன்
  66. விறுவிறுப்பு
  67. தமிழ் CNN
  68. தமிழ் தாமரை
  69. யாழ்
  70. பொங்குதமிழ்
  71. 2தமிழ்
  72. தமிழ் யூத் கேபே
  73. என் வழி
  74. செய்தி.காம்
  75. ஸ்ரீலங்கா மிரர்
  76. ekuruvi.com
  77. அதிர்வு
  78. நெருடல்
  79. விடுதலை
  80. வணக்கம் இந்தியா
  81. அக்கினிக்குஞ்சு

Online Tamil FM Stations

Online FM

Friday, 23 August 2013

தமிழ்த்தாய் வாழ்த்து

தமிழக அரசால் ஏற்றுக்கொள்ளப்பட்ட தமிழ்வாழ்த்து வாழ்த்துப்பாடலை

எழுதியவர் மனோன்மணியம் சுந்தரனார் என்பவராவார். இவர் எழுதிய

புகழ்ப்பெற்ற நாடக நூலான மனோன்மணியம் நூலில் உள்ள

துதிப்பாடலின் ஒரு பகுதி இப்பாடலாகும். இதை 1970ஆம் ஆண்டு தமிழக

அரசு இப்பாடலை தமிழ்த்தாய் வாழ்த்தாக அறிவித்தது.


<audio src="http://anpendralaamma.blogspot.in/wp-
content/uploads/2011/12/Neerarum.mp3" controls="">
 <embed src="http://anpendralaamma.blogspot.in/wp-
content/uploads/2011/12/Neerarum.mp3" width="300" height="90" loop="false"
autostart="false">
</audio>


பாடல் :

"நீராருங் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகும்
சீராரும் வதனமெனத் திகழ் பரதக் கண்டமிதில்
தெக்கணமும் அதிற்சிறந்த திராவிடநல் திருநாடும்
தக்கசிறு பிறைநுதலும் தரித்தநறுந் திலகமுமே
அத்திலக வாசனைபோல் அனைத்துலகும் இன்பமுற
எத்திசையும் புகழ்மணக்க இருந்தபெருந் தமிழணங்கே!
தமிழணங்கே!

உன் சீரிளமைத் திறம்வியந்து
செயல்மறந்து வாழ்த்துதுமே!
வாழ்த்துதுமே!!
வாழ்த்துதுமே!!!"

பொருள் :

நீர் நிறைந்த கடலெனும் ஆடையுடுத்திய நிலமெனும் பெண்ணுக்கு, அழகு

மிளிரும் சிறப்பு நிறைந்த முகமாக திகழ்கிற இந்தியக் கண்டத்தில்,

தென்னாடும் அதில் சிறந்த திராவிடர்களின் நல்ல திருநாடானது ,

பொருத்தமான பிறைபோன்ற நெற்றியாகவும், அதிலிட்ட மணம் வீசும்

திலகமாகவும் இருக்கின்றன. அந்த திலகத்தில் இருந்து வரும்

வாசனைபோல, அனைத்துலகமும் இன்பம்பெறும் வகையில்

எல்லாத்திசையிலும் புகழ் மணக்கும்படி இருக்கின்ற பெருமை மிக்க

தமிழ்ப்பெண்ணே! தமிழ்ப்பெண்ணே! இன்றும் இளமையாக இருக்கின்ற

உன் சிறப்பானத் திறமையை வியந்து எங்கள் செயல்களை மறந்து

உன்னை வாழ்த்துவோமே! வாழ்த்துவோமே! வாழ்த்துவோமே!
இந்திய தேசிய கீதம்

ஜன கண மன... இந்திய தேசிய கீதமாகும். இப்பாடல் வங்காள மொழியில்

இரவீந்திரநாத் தாகூர் இயற்றிய கவிதை ஒன்றின் தொடக்க வரிகளாகும்.

இந்த கீதத்தை முழுவதாக பாடுவதற்கு 52 விநாடிகள் பிடிக்கிறது

பாடல் :

ஜன கண மன அதிநாயக ஜெய ஹே
பாரத பாக்ய விதாதா.
பஞ்சாப சிந்து குஜராத மராத்தா
திராவிட உத்கல வங்கா.
விந்திய இமாசல யமுனா கங்கா
உச்சல ஜலதி தரங்கா.
தவ சுப நாமே ஜாகே,
தவ சுப ஆஷிஷ மாகே,
ஜாஹே தவ ஜெய காதா.
ஜன கண மங்கள தாயக ஜெயஹே
பாரத பாக்ய விதாதா.
ஜெய ஹே, ஜெய ஹே, ஜெய ஹே,
ஜெய ஜெய ஜெய, ஜெய ஹே.


பொருள் :
மக்கள் பெருங்கூட்டத்தின் மனத்தில் ஆட்சி செய்பவள் நீ தான். வெற்றி

உனக்கே !
இந்தியத் திருநாட்டின் பாக்கியங்களைத் தருபவள் நீ..
பஞ்சாப் மாகாணம், சிந்து நதிப்பிரதேசம், குஜராத் மாநிலம், மராட்டிய

மாநிலம்,
திராவிட பீடபூமி, உத்கலமாகிய ஒரிஸ்ஸா மாநிலம், வங்காள (பங்கா)

தேசம் உன்னுடையது ..
விந்திய இமாசல யமுனா கங்கா
மூன்று திசைகளிலும் உன்னைச் சூழ்ந்திருக்கும் மாக்கடல்கள் உன் புகழை

தங்கள் அலைக் கரங்களால் எப்போதும் பாடிக் கொண்டிருக்கின்றன..
உனது மங்கலகரமான திருநாமத்தை எப்போதும் நாங்கள் பாடிப் போற்றிக்

கொண்டிருக்கிறோம்.,
உனது மங்கலகரமான ஆசிகளை வேண்டி நிற்கின்றோம்.,
உன்னுடைய மாபெரும் வெற்றியை வேண்டியே நாங்கள்

பாடிக்கொண்டிருக்கிறோம்..
இந்திய மக்களின் மங்கலங்களை அள்ளித் தருபவள் நீ. வெற்றி உனக்கே!
இந்தியத் திருநாட்டின் பாக்கியங்களைத் தருபவள் நீ..
வெற்றி உனக்கே! வெற்றி உனக்கே! வெற்றி உனக்கே!
வெற்றி! வெற்றி!! வெற்றி!!! வெற்றி உனக்கே!.

Amma Songs Lyrics

அம்மா என்றழைக்காத உயிர் இல்லையே..

Song: Amma Endrazhaikaatha
Singer: K.J.Yesudas
Music: Ilaiyaraaja
Lyrics: Vaali

http://www.youtube.com/watch?feature=player_embedded&v=u3nPVX1m_Lg

அம்மா என்றழைக்காத உயிர் இல்லையே..
அம்மாவை வணங்காது உயர்வில்லையே..
அம்மா என்றழைக்காத உயிர் இல்லையே..
அம்மாவை வணங்காது உயர்வில்லையே..
நேரில் நின்று.. பேசும் தெய்வம்..
பெற்ற தாய் அன்றி வேறொன்று ஏது..
அம்மா என்றழைக்காத உயிர் இல்லையே..
அம்மாவை வணங்காது உயர்வில்லையே..

அபிராமி சிவகாமி கருமாயி மகமாயி
திருக்கோயில் தெய்வங்கள் நீதான் அம்மா..
அன்னைக்கு அன்றாடம் அபிஷேகம் அலங்காரம்
புரிகின்ற சிறு தொண்டன் நான்தான் அம்மா..
பொருலோடு புகழ் வேண்டும் மகனல்ல தாயே உன்
அருள் வேண்டும் எனக்கென்றும் அது போதுமே
அடுத்திங்கு பிறப்பொன்று அமைந்தாலும் நான் உந்தன்
மகனாக பிறக்கின்ற வரம் வேண்டுமே
அதை நீயே, தருவாயே..

அம்மா என்றழைக்காத உயிர் இல்லையே..
அம்மாவை வணங்காது உயர்வில்லையே..

பசும் தங்கம் புது வெள்ளி மாணிக்கம் மணிவைரம்
அவை யாவும் ஒரு தாய்க்கு ஈடாகுமா..?
விலை மீது விலை வைத்து கேட்டாலும் கொடுத்தாலும்
கடை தன்னில் தாய் அன்பு கிடைக்காதம்மா
ஈரைந்து மாதங்கள் கருவோடு எனைத்தாங்கி
நீ பட்ட பெரும் பாடு அறிவேன் அம்மா..
ஈரேழு ஜென்மங்கள் எடுத்தாலும் உழைத்தாலும்
உனக்கிங்கு நான் பட்ட கடன் தீருமா..?
உன்னாலே பிறந்தேனே..

அம்மா என்றழைக்காத உயிர் இல்லையே..
அம்மாவை வணங்காது உயர்வில்லையே..
நேரில் நின்று.. பேசும் தெய்வம்..
பெற்ற தாய் அன்றி வேறொன்று ஏது..
அம்மா என்றழைக்காத உயிர் இல்லையே..
அம்மாவை வணங்காது உயர்வில்லையே..
அம்மா என்றழைக்காத உயிர் இல்லையே..
அம்மாவை வணங்காது உயர்வில்லையே..

படித்ததில் பிடித்தது

பேசும் முறைகள்...
தாயிடம் - அன்பாக பேசுங்கள்..!
தந்தையுடன் - பண்பாக பேசுங்கள்..!
ஆசிரியரிடம் - அடக்கமாக பேசுங்கள்..!
துணைவியுடன் - உண்மையாக
பேசுங்கள்..!
சகோதரனிடம் - அளவாக பேசுங்கள்..!
சகோதரியிடம் -
பாசத்தோடு பேசுங்கள்..!
குழந்தைகளிடம் -
ஆர்வத்தோடு பேசுங்கள்..!
உறவினர்களிடம் -
பரிவோடு பேசுங்கள்..!
நண்பர்களிடம் -
உரிமையோடு பேசுங்கள்..!
அதிகாரியிடம் -
பணிவோடு பேசுங்கள்..!
வியாபாரியிடம் - கறாராக பேசுங்கள்..!
வாடிக்கையாளரிடம் - நேர்மையாக
பேசுங்கள்..!
தொழிலாளரிடம் -
மனிதநேயத்தோடு பேசுங்கள்..!
அரசியல்வாதியிடம் - ஜாக்கிரதையாக
பேசுங்கள்..!
இறைவனிடம் - மெளனமாக
பேசுங்கள்..!

#பேசலாமே,
ஆனால் எங்கு என்ன எப்படி பேச வேண்டும் என்று
நன்கு சிந்தித்து கனிவாய் பேசுவோம் 
எந்த வேலையும் செய்யாமல்
அடிக்கடி கவிதை கிறுக்குகிறேன்
என அம்மா திட்டுவாள்..
பாவம் !
அவள் அறியவில்லை
அவள் கிறுக்கிய
அழகிய கவிதை
நான் என்று.

வெற்றிக்கு வழி

1. தினமும் அரை நாள் (12 மணி நேரம்) கடுமையாக உழையுங்கள்.

2. வாய்ப்புகளை திறக்கும் சாவி உழைப்புதான் என்பதை மறக்காதீர்.

3. வெற்றி ஒன்றையே மனம் நினைக்கவேண்டும்.

4. வெற்றி என்னும் ஏணியில் ஒவ்வொரு படியாகத்தான் ஏறவேண்டும்.

5. ஒரு மரத்தின் உச்சியை அடைய இரண்டு வழிகள் உண்டு. ஒன்று,

யாராவது ஏற்றி விடுவார்கள் என்று காத்திருப்பது,
மற்றொன்று நாமே ஏறுவது.

6. வியாபார அபாயங்களை கண்டு அஞ்சக்கூடாது.

7. பிடித்த காரியத்தை செய்யவேண்டும் என்பதைவிட செய்யும் காரியத்தை

நமக்கு பிடித்ததாய் ஆக்கிக்கொள்ளவேண்டும்.

8. முடியாது, தெரியாது, நடக்காது, என்ற வார்த்தைகளை சொல்லவே

கூடாது.

9. பாதுகாப்பாய் ஒரே இடத்தில் இருப்பது வளர்ச்சிக்கு உதவாது.

10. வெற்றிக்கு தேவை பாதி அதிர்ஷ்டம் பாதி அறிவு.
உன் குழந்தையை முதல் ஐந்து வருடங்கள்
செல்லமாக வைத்துக்கொள்.

அடுத்த ஐந்து வருடங்களும்
திட்டி துர்த்துக்கொள்.
பதினாறு வயதை எட்டும்போது
 உன் நண்பனைப் போல நடத்து.

தலைக்குமேல் வளர்ந்துவிட்ட
 உன் பிள்ளைகள் தான் உனக்கு உற்ற
நண்பர்கள்  == சாணக்கியர்.
கடலில் நடப்பாய்,
விண்ணில் மிதப்பாய்
காற்றில் பறப்பாய்
இன்னும் புரியல்ல
செத்துப்போய் விடுவாய்
வெயிலோ
மழையோ
இரவோ
பகலோ
வசதியோ
வறுமையோ
கல்யாணமோ
கருமாதியோ
எப்போதும்
ஐஸ்கிரீம் கேட்க
குழந்தைகளுக்கே
உரிமை உள்ளது
உன் மடியில் தலைவைத்து உறங்கும் சுகம் !

நீ உண்ணும் பொழுது ஒரு வாய் ஊட்டிவிட சொல்லி உன் எச்சிலை

சாப்பிடும் சுகம் !

தினமும் காலை உன்னிடம் திட்டுக்கள் வாங்கிவிட்டு பள்ளி செல்லும் சுகம் !

மாலை வீடு திரும்பியதும் ஒன்றுமே நடக்காதது போல் என் தலையை

வருடிக் கொடுக்கும் சுகம் !

நான் தூங்கி விட்டேன் என்று எண்ணி என் நெற்றியில் நீ முத்தம்

கொடுக்கும் சுகம் !

இது அனைத்தையும் இன்று வரை எண்ணி எண்ணி ஆனந்தம்

அடைகிறேன்  திரும்பவும் அந்த சுகம் கிடைக்காதே என் தாயிடம் இருந்து

#ஏழு கழுதை வயசாச்சு இன்னும் பிள்ளைய கொஞ்சிகிட்டு இருக்கனு யாரு

சொன்னாலும் என் பிள்ளை கிழவி ஆனாலும் எனக்கு அவள் குழந்தைதான்

என்று சொல்லி என்னை தன் வாழ்நாள் முழுக்க சுமந்திருந்த உன்னை

கடைசி காலம் வரை சுகமாக சுமக்க வேண்டும் என்று எண்ணிய என்

எண்ணமெல்லாம் உன்னோடே புதைகுழியில் போய்விட்டதே அம்மா

Kavithai

பிறப்பிற்கு முன் உயிரில்..
பிஞ்சு வயதில் மடியில்..
தவழும் வயதில் தோளில்..
கடைசி வரை இதயத்தில்
நம்மை சுமப்பவள்
"அம்மா "
நீ இன்றி ஏதம்மா எனக்கு அடையாளம் உன் நிழலில்தான் என் எதிர்காலம்

உனைவிடவா இப்பூவுலகில் வேறுகடவள் இருக்கமுடியும் அப்படியே

இருந்தாலும் அது உனக்கும்கீழ்தானம்மா

பத்துமாசம் என்ன சுமந்த

பத்துமாசம் என்ன சுமந்த
பத்தரமாத்து தங்கம் நீயும்...
பட்டபாடு நானறிவேன் - உன்
பாசம்பாத்தா அணையும் தீயும்..

பாராட்டி சீராட்டி
பாசம்காட்டி வளத்துப்புட்ட..
பாடையில போறவரை
பாவிமனம் மறக்காதம்மா..

ஊரே கும்பிடுபோடும்
உத்தியோகம் பாக்குறவ..
வீட்டுக்குள்ள நீ எனக்கு
பாத்துபாத்து எல்லாம் செய்வ..

உசந்தபடிப்பு நான் படிக்க
ஊரவிட்டு அனுப்பி வெச்ச..
உலகமெங்கும் சுத்துனாலும்
உறங்கதம்மா உன் நினைப்பு..

உன்னபோல மக வேணும்
உன்ன கொஞ்சம் சுமப்பதுக்கு...
உன் பாசத்துல பாதிபோதும்
என் பொஞ்சாதியா வாறதுக்கு...

உன்ன பேச வார்த்தயில்ல
உன் பாசம்பேச கவிதயில்ல
என்ன பெத்தமனம் பித்து இல்ல
உன் ஒத்தபுள்ள மனமும் கல்லு இல்ல..

என் அம்மா.. இது உனக்கு..

Thursday, 22 August 2013

ஏக்கங்கள்...

கண்ணம்மா... அன்று
உன் பார்வை என்போது விழும் என்று
என் பார்வை ஏங்கியது
உன் கரம் சேர்த்து
கடற்கரையில் காற்றுவாங்க
என் கரம் ஏங்கியது,
நம் காதல் கரை சேராதா... என்று
என் கண்ணீரும் ஏங்கியது
காதலில் சேர்ந்து விட்டோம்... இன்று
காசுக்காக ஏங்குறேனடி.....
கண்ணம்மா... சேர்ந்துவாழ.

களவாட எங்கே செல்வது....

மலர் ஒன்று
என்னை பார்க்க....
மதி மயங்கி போனேன்.
அவளின் செவ்விதழின்
சுவை சேர...
கனவில் சென்று
களவாடி வந்தேன்.
காதல் கனிந்து
காதலியின் கரம் பற்றினேன்
ஆசைக் கடலில்
கரையேற நீந்தினேன்.

கண்கள் அறியும்....


காமப் பசியை....
காதல் அறியுமா...
குடல் பசியை....
இப்போது...
விதியை நினைத்து
விம்முகிறேன்
கன்னி இவளை காப்பாற்ற
களவாட எங்கு செல்வது....?

கண்டுக்கொண்டேன்....

ரவிவர்மன்
ஓவியம் கண்டேன்
கம்பன்
கவிகளும் கண்டேன்
ஆனால்...
என்னுள்தான்
கம்பனாவும், ரவிவர்மனாவும்
கண்டுக்கொண்டேன்
கண்டுக்கொண்டேன்...
காரணம்
நீதானடி.....

விரும்புகிறேன்...

நான் கரையல்லடி...
நீ மோதி மோதி அடிப்பதற்கு
நான் வண்டல்லடி...
உன்னுள் தேனை
மட்டும் உண்டு பறப்பதற்கு
நான் காற்றாய்... அல்லவா
உன்னுள் கரைய விரும்புகிறேன்.

நீ வருவாய் என....

தலையைச் சுட்டெரிக்கிறது
தரையில் சூடு....
அனல் பறக்கிறது,
உடலோ... வெந்து
வியர்வையில் வழிகிறது.
உஷ்ணம் தாங்க
முடியவில்லையடி...
ஆனாலும்... நீ
சொல்லியதால் தானடி
காத்து நிற்கிறேன்
நீ வருவாய் என...

காதல் கொண்டேன்....

தேனும், கரும்பும்
சுரக்கிறது
தேடாமலே விழிகள்
சோர்கிறது
புரியவில்லையாடி..
காதல் கொண்டேன்
உன்மேல்...

காதல் தோல்வி

தேர்வுக்காக
படித்த நாட்களைவிட
அவள் காதலுக்காக
சிந்தித்த நாட்கள் அதிகம்
தேர்வில் தோல்வி
அடைந்த அதிர்ச்சியைவிட
காதல் தோல்வியால்
மீள முடியாமல் பார்க்கிறேன்..
மரணப் பாதையை....

பெண்.....

நீ நல்ல பெண்
என்றார்கள்
அதனால்தான்
உன்னிடம்
காதலை சொன்னேன்
ஆனால்...
நல்ல பாம்பாய்
சீறிவிட்டாயே....

திருடா .... திருடி....

தெரியாமலேயே தொலைந்துபோனது
என் இதயம்
திருடியை காணவில்லை....
திருடனாய் சென்றுதான்
அவளை பிடிக்க வேண்டும்...

Kavithai

நான் செய்த
குற்றம் தான் என்னடி
உன் விழியால்
விளங்கு பூட்டி,
உன் இதழ் சிரிப்பால்
சிறை பிடித்து...
உன் இதயச் சிறையில்
தள்ளும் அளவிற்கு....

காதல் ஜூரம்....

மருத்துவரிடம் சென்றேன்
மருந்தும், மாத்திரையும்
உண்டேன்
பூசாரியிடம் வேப்பிலையில்
அடியும் வாங்கினேன்
சாம்பலை பூசினேன்..
புரியவில்லையடி...
எனக்குள் வந்துருப்பது
காதல் ஜூரம்
உன் பார்வை மருந்துக்காக
ஜென்மம் எல்லாம்...
காத்திருக்கேன் நோயாளியாய்....

மின்சார கனவு.....

தொட்டால் தான்
மின்சாரம் பாயும்
தொடாமலே துடித்துவிட்டேன்
உன்
மின்சார கனவில்..

மாறிய என் மனம்

உனக்காக...
உண்ண மறுக்கிறேன்
எனக்காக....
உண்ண மறந்த
என் வாயை மறந்தேன்
உனக்காக...
உறங்க மறுக்கிறேன்
எனக்காக
உறங்க மறந்த
என் தந்தையை மறந்தேன்
உனக்காகவே
வாழ நினைக்கிறேன்..
எனக்காக...

இதுதான் உத்தமம்

உனக்காக..... பட்டினி இருக்கிறேன்
எனக்காக பட்டினி இருந்த
என் தாயை மறந்தேன்
உனக்காக..... தூங்க மறுக்கிறேன்
எனக்க்க தூங்க மறந்த
என் தந்தையை மறந்தேன்
உனக்காக... வாழதான் நினைக்கிறேன்
எனக்காக வாழும் குடும்பத்தை
எதற்காக மறக்கனும்...
நீயும் உன் உறவுகளை நினை
முறையோடு பெண் கேள்....
தந்தால் திருமணம்
இல்லை என்றால்
மறந்துவிடுவது உத்தமம்.

என் தங்கைகாக...

என் இதயம் கேள் தருகிறேன்
என் உணர்வை கேள் தருகிறேன்
என் அன்பை கேள் தருகிறேன்
என் பரிவை கேள் தருகிறேன்
என் பாசத்தைக் கேள் தருகிறேன்
என் உடம்பை கேள் தருகிறேன்
ஆனால்....
என்னுடனான வாழ்க்கையை மட்டும்
கேட்டுவிடாதே
அது இன்னொரு
பெண்ணிடம் அடமானம்
வைக்க வேண்டும்
என் தங்கை திருமணத்திற்காக.......

"அன்னையில் அறிவுரை"

கடனோடு
 காலையில்
 எழுவதைவிட
 பட்டினியோடு
 இரவில் படுப்பது மேல்

இன்று ஒரு தகவல்

ஒருவருக்கு உபகாரம் செய்ய வேண்டும் என்றால் முதலில் தாய்க்கு செய்
ஒருவருக்கு மரியாதை செய்ய வேண்டும் என்றால் முதலில் தந்தைக்கு செய்

"அம்மா"

தாயே உன் அரவணைப்பால்
என்னில் சங்கமித்த புனிதங்கள் மட்டுமில்லை !

உன்னை நினைப்பதால் அந்த
பாலைவனத்தின் தாகம் கூட தீரும் !

தன்னம்பிக்கை

தோல்விகள் என்பது
 உன்னைத் தூங்க
 வைக்கப்படும் தாலாட்டு அல்ல.
 நீ நிமிர்ந்து நிற்பதற்கான தேசிய கீதம்.

"அம்மா"

கருவில் தாங்கி
உருவினில் உயிர் பெற
உழைத்தவள் அம்மா
உயிர் எழுத்தின்
உண்மை பெயர்   "அம்மா"

Jokes


பஸ் சிக்னல நிக்கும் போது பக்கத்தில் கார் உள்ள இருந்த பொண்ண பாத்துட்டு இருந்தேன் .

உடனே என் பக்கத்தில் இருந்த பெரியவர் சொன்னார்.

தம்பி அந்ந பொண்ணு போற கார் 5லட்சம் .

உடனே நான் சொன்னேன் ,
ஐயா.
நான் போற பஸ் 20லட்சம்னு .

தன்னம்பிக்கை

நினைப்பது ஒன்று நடப்பது இன்னொன்று.....
நாம் நடப்பதை எல்லாம் நல்லதாய் எண்ணி கொள்வோம்
நாம் நினைப்பதும் ஒரு நாள் நிச்சயம் நடக்கும்.
விழிப்பதற்கே  உறக்கம்
வெல்வதற்கே தோல்வி
எழுவதற்கே வீழ்ச்சி
நீ சிரிக்கும் ஒவ்வொரு நொடியும்
உன் பின்னால் இருப்பேன், உன்சிரிப்பை ரசிக்க.
நீ அழும் ஒவ்வொரு நொடியும்
உன் முன்னால் இருப்பேன், உன் கண்ணீரை துடைக்க...