அன்பென்றாலே அம்மா

அன்பென்றாலே அம்மா

Saturday, 27 April 2019

தமிழகத்தை நோக்கி வந்து கொண்டு இருந்த மழை இப்போது திசை மாறி செல்ல துவக்கி உள்ளது எனவே தமிழகத்திற்கு மழைக்கு வாய்ப்பு குறைவு....மேலும் கடலில் புயல் உருவாகி உள்ள காரணத்தால் நிலத்தில் உள்ள ஈரப்பதம் முழுவதும் ஈர்க்கப்படுவது மட்டும் அல்லாமல் கடல் காற்றும் தடுக்கப்படும் எனவே தமிழத்தில் வழக்கத்தை விட வெப்பம் மிகவும் அதிகரிக்கும் இதன் காரணமாக உயிர் இழப்புகள் கூட ஏற்படும் என்று வானிலை ஆய்வு முடிவுகள் சொல்கிறது. எனவே எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திப்போம். கீழே உள்ள இந்த வருண காயத்ரி மந்திரத்தை நேரம் கிடைக்கும் போது எல்லாம் நல்ல மழை பொழிய வேண்டும் என்று வேண்டிக் கொண்டு ஜெபிக்க கேட்டுக்கொள்கிறேன். குறிப்பாக வரும் 28-4-2019 அன்று அனைவரும் மாலை 6 மணிமுதல் 7 மணிவரை எங்கே இருந்தாலும் என்ன செய்து கொண்டு இருந்தாலும் மனதிற்குள் இந்த மந்திரத்தை ஜெபிக்குமாறு பெரியவர்கள் அறிவுறுத்தி உள்ளார்கள் எனவே நாமும் இந்த கூட்டு பிரார்த்தனையில் கலந்து கொண்டு இறைவனை பிரார்த்திப்போம் மழையை பெறுவோம் 🙏.( இஸ்லாம் மற்றும் கிறிஸ்து சகோதரர்கள் அவர்கள் வழக்கப்படி மழை வேண்டி இறைவனை பிராத்திக்கவும்).
நீர் இன்றி அமையாது உலகு.

No comments:

Post a Comment