அரசு பஸ்கள் மற்றும் பஸ் நிலையங்களில், அரசு சார்பில், 10 ரூபாய் விலையில் வினியோகிக்கப்படும், "அம்மா குடிநீர்' திட்டத்திற்கான, கும்மிடிப்பூண்டி உற்பத்தி நிலையம் மற்றும், குடிநீர் விற்பனையை, தலைமைச் செயலகத்தில் இருந்து, "வீடியோ கான்பரன்ஸ்' மூலம், முதல்வர் ஜெயலலிதா துவக்கி வைத்தார்.
பொதுமக்களுக்கு குறைந்த விலையில் பாதுகாப்பான குடிநீர் வழங்கும் நோக்கில், இந்தியாவிலேயே முதல் முறையாக, தமிழக அரசு போக்குவரத்துக் கழகங்களின் சார்பில், தமிழகம் முழுவதும், "அம்மா குடிநீர்' உற்பத்தி நிலையங்கள், அண்ணாதுரை பிறந்த தினத்தில் (நேற்று) திறக்கப்பட்டு, அன்றே விற்பனையும் துவக்கப்படும் என்று, தமிழக முதல்வர், கடந்த ஜூன், 21ம் தேதி அறிவித்தார்.
முதல்கட்டமாக, திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி சாலை போக்குவரத்துக் கழக நிறுவன வளாகத்தில, 2.47 ஏக்கர் பரப்பில், அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில், குடிநீர் உற்பத்தி நிலையம் அமைக்கப்பட்டு உள்ளது. இங்கிருந்து நாள் ஒன்றிற்கு, 3 லட்சம் லிட்டர் குடிநீர் உற்பத்தி செய்யப்படுகிறது.
சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், 1 லிட்டர் அளவு பிளாஸ்டிக் பாட்டில்களாக, நீண்ட தூரம் செல்லும் அரசு பஸ்களிலும், சென்னையில் உள்ள பஸ் நிலையங்களிலும், மாவட்டங்களில் உள்ள பஸ் நிலையங்களிலும், பாட்டில் ஒன்று, 10 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
ரயில்வே நிர்வாகத்தால், 1 லிட்டர் குடிநீர், 15 ரூபாய்க்கும், தனியார் சார்பில், 20 ரூபாய்க்கும் விற்கப்படும் நிலையில், அரசு சார்பில், 10 ரூபாய்க்கு விற்கப்படுவது குறிப்பிடத்தக்கது. இத்திட்டம், மாநிலத்தின் மற்ற மாவட்டங்களில் செயல்படும், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களின் சார்பில், 9 இடங்களுக்கு படிப்படியாக விரிவுபடுத்தப்படுகிறது.
அண்ணாதுரை பிறந்த தினத்தை முன்னிட்டு, கும்மிடிப் பூண்டியில் அமைக்கப்பட்டுள்ள, "அம்மா குடிநீர்' உற்பத்தி நிலையம் மற்றும் குடிநீர் விற்பனையை, தலைமைச் செயலகத்தில், நேற்று,"வீடியோ கான்பரன்ஸ்' மூலம், முதல்வர் ஜெயலலிதா துவக்கி வைத்தார்.
மேலும், போக்குவரத்துத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜியிடம், 10 ரூபாய் செலுத்தி குடிநீர் பாட்டில்களை பெற்றுக் கொண்ட முதல்வர், மேலும், ஏழு பேருக்கு குடிநீர் பாட்டில்களையும் வழங்கினார்.
நன்றி: தினமலர்

No comments:
Post a Comment