அன்பென்றாலே அம்மா

அன்பென்றாலே அம்மா

Monday, 19 August 2013

Appavin Kavithaigal

ஆண்களின் விசித்திர உலகம் ஒவ்வொரு பெண்ணுக்கும் அப்பாக்களின் வழியே முதல்அறிமுகமாகிறது............!!

கண்டிப்பும் கண்ணியமும் மிக்கஅப்பாக்கள் தங்கள் பாசத்தைவெளிப்படுத்தும் தருணங்கள்மிக அலாதியானவை....!!

என் மகளுக்குப் பிடிக்கும் என்று குமுதம் முதல் குட்டி ஜிமிக்கி வரைநீளும் பட்டியல்கள் தான் எத்தனை..எத்தனை........!!!

சொல் பொருக்காத மகளை அரிசியில் கல் பொருக்கக்கூடவிடுவதில்லை..இங்கு இருக்கும் வரை தான் செல்லம் என்று...!

அப்பாக்களின் கனவில் எப்போதும் தன் அழகியமகள் தப்பாமல் சிரித்தபடியே வலம்வருவாள்...!!

அதிகாரமும் ஆளுமையும் கொஞ்சம் ஆணவமும் உள்ளஅப்பா மீண்டும் குழந்தையாகிப்போவார், மகளின் பிரசவத்திற்குப்பின்..!!!

இதற்குப்பின் அப்பாக்களைப்பற்றி எனக்குத் தெரியவில்லையே..??

மறைந்து விட்ட என் அப்பா எங்களை மறந்து இருப்பாரா???
இல்லைஇப்போதும் மகளுக்குப்பிடிக்குமே என்றுமனதில் நினைத்து கொண்டிருப்பாரா??

என்னவோ......... துரியோதனனைப் போல்இயல்பாய்க் கேட்க முடிவதில்லை.....

எடுக்கவோ..கோர்க்கவோ என்று நினைவு நூலில் இருந்துஅறுந்துவிட்ட உறவுகளை..!!!

No comments:

Post a Comment