அன்பென்றாலே அம்மா

அன்பென்றாலே அம்மா

Thursday, 22 August 2013

என்றென்றும் நன்றியுடன்.....

ஒவ்வொரு தருணத்திலும்
நாம் யாருடைய உதவி அல்லது
எதாவது ஒன்றின் உதவியோடு தான்
வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

காலை கண்விழிப்பது முதல்
இரவு கண் அயர்வது வரை
பிறப்பு முதல் இறப்பு வரை

முதலாவதாக அம்மா
உடல் சுமந்து இருமடங்கு உயிர் வலி பொருத்து
ஈன்று குருதியை பாலாய் கொடுத்த தெய்வம்

இரண்டாவதாக
உயிர் கொடுத்த தந்தை
முகவரி முதல் கல்வி செல்வம்
என தாய் விட்டதெல்லாம் தரும் தந்தை

மூன்றாவதாக குரு
கல்வி கொடுத்து வாழும் வழி காட்டி
உன்னை உயர்த்தும் உத்தமர்

எல்லாவற்றிற்கும் காரண்மாகிய
எல்லாம் வல்ல இறை
என எதற்கும் நன்றியோ மரியாதையோ தருவதில்லை

நன்றி என்பது சொல் அல்ல செயல்
நன்றி என்பது ஒவ்வொருவரின் கடன் கடமை
நன்றி எப்பொழுதும் எல்லோருக்கும்

அது ஒரு உயர்ந்த உணர்வு
உண்மை உணர்த்தும் உணர்வு
உன்னை உயர்த்தும் உணர்வு

உள்ளங்கள் மகிழ
உணர்ந்திடு நன்றி
உரைத்திடு நன்றி நன்றி

(நன்றி மறப்பது நன்றன்று

உய்வில்லை செய் நன்றி கொன்ற மகர்க்கு

செய்யாமல் செய்த உதவிக்கு வையகமும்
வானகமும் ஆற்றல் அரிது - திருவள்ளுவர்)

என்றென்றும் நன்றியுடன் 

No comments:

Post a Comment