தமிழ்த்தாய் வாழ்த்து
தமிழக அரசால் ஏற்றுக்கொள்ளப்பட்ட தமிழ்வாழ்த்து வாழ்த்துப்பாடலை
எழுதியவர் மனோன்மணியம் சுந்தரனார் என்பவராவார். இவர் எழுதிய
புகழ்ப்பெற்ற நாடக நூலான மனோன்மணியம் நூலில் உள்ள
துதிப்பாடலின் ஒரு பகுதி இப்பாடலாகும். இதை 1970ஆம் ஆண்டு தமிழக
அரசு இப்பாடலை தமிழ்த்தாய் வாழ்த்தாக அறிவித்தது.
<audio src="http://anpendralaamma.blogspot.in/wp-
content/uploads/2011/12/Neerarum.mp3" controls="">
<embed src="http://anpendralaamma.blogspot.in/wp-
content/uploads/2011/12/Neerarum.mp3" width="300" height="90" loop="false"
autostart="false">
</audio>
பாடல் :
"நீராருங் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகும்
சீராரும் வதனமெனத் திகழ் பரதக் கண்டமிதில்
தெக்கணமும் அதிற்சிறந்த திராவிடநல் திருநாடும்
தக்கசிறு பிறைநுதலும் தரித்தநறுந் திலகமுமே
அத்திலக வாசனைபோல் அனைத்துலகும் இன்பமுற
எத்திசையும் புகழ்மணக்க இருந்தபெருந் தமிழணங்கே!
தமிழணங்கே!
உன் சீரிளமைத் திறம்வியந்து
செயல்மறந்து வாழ்த்துதுமே!
வாழ்த்துதுமே!!
வாழ்த்துதுமே!!!"
பொருள் :
நீர் நிறைந்த கடலெனும் ஆடையுடுத்திய நிலமெனும் பெண்ணுக்கு, அழகு
மிளிரும் சிறப்பு நிறைந்த முகமாக திகழ்கிற இந்தியக் கண்டத்தில்,
தென்னாடும் அதில் சிறந்த திராவிடர்களின் நல்ல திருநாடானது ,
பொருத்தமான பிறைபோன்ற நெற்றியாகவும், அதிலிட்ட மணம் வீசும்
திலகமாகவும் இருக்கின்றன. அந்த திலகத்தில் இருந்து வரும்
வாசனைபோல, அனைத்துலகமும் இன்பம்பெறும் வகையில்
எல்லாத்திசையிலும் புகழ் மணக்கும்படி இருக்கின்ற பெருமை மிக்க
தமிழ்ப்பெண்ணே! தமிழ்ப்பெண்ணே! இன்றும் இளமையாக இருக்கின்ற
உன் சிறப்பானத் திறமையை வியந்து எங்கள் செயல்களை மறந்து
உன்னை வாழ்த்துவோமே! வாழ்த்துவோமே! வாழ்த்துவோமே!

No comments:
Post a Comment